என்னைப் பற்றி

 (03.07.2013)

வணக்கம் அன்பு உள்ளங்களே......                                                       

                என்னைப்  பற்றி  அறிந்துகொள்ள உங்களை வரவேற்கிறேன்.முதலில் இந்த கார்த்திக் ஒரு மனிதன்தான் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.நான் பல கனவுகளைக் கண்டேன்.நான் சாதிப்பதாகவும்,பலரை சாதிக்க வைப்பதாகவும்,அன்பும் அமைதியும் மனிதன் உள்ளத்தில் குடியிருந்து வாழ்வை செழிப்பாக்குவதாக கனவு கண்டேன்.இன்னும் நிறைய கனவுகள் கண்டேன்.

         இந்த கனவுகளில் தலையாது எனது இந்தியாவை சிறப்பாக்குவது. இதற்கு ஒவ்வொரு இந்தியனின் உதவியும் தேவை.அவ்வாறு இந்தயர்களை ஒன்று சேர்க்கவே நான் பாடுபடுகிறேன்.இந்த BIGDREAMERSINDIA   என்னும் அற்புத  வலைப்பூவில் என்றும் இணைந்திருங்கள்.இதுவே நான் உங்களை கேட்டுக்கொள்வது.

    நண்பர்களே இந்த கனவுகளை அடைய முதலில் என்னை நான் செதுக்க வேண்டும்.அதற்கான முதல் நடவடிக்கையாக சில விசயங்களை பிளாக்கரின் உதவியுடன் செய்து வருகிறேன்.நீங்கள் புதியவராக இருந்தால் முதல் பதிவில் இருந்து படித்தால் இன்னும் நிறைய என்னைப் பற்றியும்,எனது மனநிலைப் பற்றியும் அறியலாம்.

ஆரம்பத்திற்கு தயாராகுங்கள் நண்பர்களே........

              இப்போது நான் பதினேழு வயது முடிந்து பதினெட்டு வயதில்(DOB=27.08.1995) அடியெடுத்து வைக்கப்போகிறேன்.கல்லூரியில் சேரப்போகும் தருணம் இது.நான் இது வரையில் குழப்பமாக இருந்தேன்.கல்வியில் மட்டுமல்ல,வாழ்க்கையிலும் ஒரு குழப்பமாகவே இருந்தேன்.இன்று (03.07.2013) என் அண்ணன் நிலையில் நான் வைத்து போற்றும் என் இனிய நண்பர் திரு.சந்தானபாரதி அண்ணாவின் வார்த்தைகள் மூலம் புது நம்மிக்கையை அடைந்துள்ளேன்.

              இந்த அறிவுரையில்  "நீ சாதனையாளன் தான்.இதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை.கடவுள் உன்னை சோதிக்கிறார் என்பதை நான் உணர்கிறேன்.இப்போது நீ சாதனை மனிதன் என்பதை கடவுளுக்கு நீருபி.உன் கனவுகளை எழுதி பல இடங்களில்  ஒட்டு.தினமும் நீ விரும்பும் கல்லூரி உனக்கு கிடைத்துவிட்டதாக கனவுகாண்.நான் உன்னை நம்புகிறேன். " என்று முடித்தார்.


    சந்தானம் அண்ணா  மீண்டும் என்னை தூண்டிவிட்டார்.அதனால் நானும் எனது இலட்சியத்தில் களம் இறங்கி செயல்பட ஆரம்பித்துவிட்டேன்.

அன்பானவர்களே.......

              இந்தவலைப்பூவில் மூன்று நபர்களுக்காக மட்டுமே எழுதுகிறேன்....

1.எனக்காக:

            நான் யாரென்று நான் அறிய விரும்புகிறேன்.மேலும் வலைப்பூவின் மூலம் என் வாழ்வின் உன்னதமான மாற்றங்கள் எப்படி நிகழ்ந்தன என்பதைப்பற்றியும், எனக்கு உத்வேகம் தந்த வார்த்தைகள் என்ன என்பதையும்  ஒருகாலத்தில் நான் அறிய விரும்புவேன்.மேலும்  என் எதிர்கால சந்ததிகள் அறிந்துகொள்ள கண்டிப்பாக உதவும்.அவர்களும் நான் சாதித்த வழிகளை பின்பற்றி வெற்றியடைவார்கள்.அதற்காகத்தான் ..........

2.சாதிக்க விரும்புபவர்களுக்காக:

            மேற்கண்ட விஷயத்தை என் டைரியிலும் எழுதி வைக்கலாம்.ஆனால் வெற்றி என் குடும்பத்துடன் நின்றுவிடும்.நான் சமுதாயமும் சாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுபவன்.என் வெற்றி வழிமுறைகள் இன்னும் பலவெற்றியாளர்களை உருவாக்கினால் தான் என் மனம் சாந்தியடையும்.
அதனால் தான் இணையத்தில் பதிவிட்டு வாழும்போதே பலசாதனைகளை பார்க்கலாம்  என்ற ஆசையுடன் எழுதுகிறேன்.இனி முடிவு உங்கள் கையில்......

3.நல்ல நண்பர்களைப் பெற :

              நான் நண்பர்களை பெறுவதில் அதிகம் நாட்டம் கொண்டவன்.நட்பு இல்லையேல் உலகம் இல்லை.எனவே ஆசையும் கனவும் கொண்டு இணைய  உலகில் வளம் வரும் நண்பர்களுடன் நட்பு பாராட்டுவதற்காக பயன்படும். நட்புக்கு வயதில்லை.எனக்கு 7௦ வயதிலும் ஓர் நண்பர் இருக்கிறார்.
இதற்காகவும் தான்.........

இவற்றை முழுமையாக வாசித்ததற்கு முதலில் நன்றி.கண்டிப்பாக நீங்கள் 2,3  நபராக இருக்க வாய்ப்புகள் அதிகம்.என் பதிவுகள் மூலம் நீங்கள் பயன் பெற்றாலோ,என்னை தொடர்பு கொள்ள விரும்பினாலோ கீழ்கண்ட முறைகளில் தொடர்புகொண்டு என்னுடன் நண்பராகுமாறு கேட்டுக்கொள்கிறேன்.நான் காத்திருக்கிறேன் உங்களுக்காக .........

BIGDREAMERSINDIA  உடன் என்றும் தொடர்புடன் இருக்க கீழ்கண்ட முறைகளை செயுங்கள்:

1.E-MAIL SUSCRIBE:
           
         நண்பர்களே புதிய பதிவுகளை உங்கள் E-MAIL க்கே வந்து விடுவதற்காகத்தான் இந்தமுறை.கீழே உள்ள பெட்டியில் உங்கள்  E-MAIL ஐக் கொடுத்து  E-MAIL சந்தாதாரர் ஆகுங்கள்.இது மிக பயனுள்ள வசதி.வாழ்த்துக்கள்.

 கவனிக்க:  
     
        நண்பர்களே  E-MAIL சந்தாதாரர் ஆகும்போது உங்கள்  E-MAIL க்கு FEED BURNAR அனுப்பும் ஒரு  MAIL வரும்.அதை நீங்கள் திறந்து அதில் உள்ள CONFERMATION இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.இல்லையென்றால் E-MAIL SUSCRIBE பூர்த்தியாகாது.நிறைய நண்பர்கள் ஆர்வமாக E-MAIL SUSCRIBE செய்வார்கள் ஆனால் CONFERMATION  இணைப்பை கிளிக் செய்யாததால் புதிய பதிவுகளை பெற முடியாது.எனவே உங்கள்  E-MAIL க்கு சென்று CONFERMATION இணைப்பை கிளிக் செய்ய மறக்காதீர்கள்.



Enter your email address:

Delivered by FeedBurner




1.தொடர்புகொள்ள :

1.MOBILE PHONE: 8124776667

2.E-MAIL               : bigdreamersindia@gmail.com

3.வலைப்பூவில் வலது ஓரத்தில் உள்ள தொடர்புகொள்ள என்பதின் வழியாக

4.அதேபோல் வலைப்பூவில் வலது ஓரத்தில் உள்ள பின்தொடர்பவர்கள்
  என்பதின் வழியாக(E-MAIL SUSCRIBE வழியாகவும் தான் நண்பர்களே.......)

5.கடிதம் எழுத விரும்பினால்

     V.KARTHICK.
    S/O K.VELLAIYANGIRI(LATE),
    4/73-1 ELAKKARADU,
    NILAVARAPPATTI (PO),
    SALEM-636201.TAMILNADU.INDIA.

என்ற முகவரியிலும் எழுதலாம்.

BIGDREAMERSINDIA விற்கு  உங்களை அன்போடு வரவேற்கிறேன்.


நன்றி..... வாழ்க வளமுடன்

இப்படிக்கு 
உங்கள் ராபின் கார்த்திக் 


6 கருத்துகள்:

  1. உயர்ந்த எண்ணம், தெளிவான எழுத்து நடை. இது தொடர்ந்தால் உங்கள் வலைப்பூ சக்கைப்போடு போடும் என்பது உறுதி.

    அன்புடன்
    ஜ கோபிநாத்

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா7/8/13 1:30 PM

    மிக்க நன்றி கோபிநாத் அண்ணா.உங்கள் வருகைக்கு நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.உங்கள் தொடர்பை என்றும் விரும்பும் அன்பு தம்பி.
    BIGDREAMER கார்த்திக் .....

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா16/11/13 8:38 AM

    நன்றி கனிராஜ் அவர்களே.....நீங்கள் நண்பராக கிடைத்ததற்கு இறைவனுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.....நன்றி...வாழ்க வளமுடன்....

    பதிலளிநீக்கு
  4. அன்புள்ள கார்த்திக் அவர்களுக்கு,


    ரவிச்சந்திரன் நான் சென்னையில் இருக்கிறேன்.. தங்கள்

    பதிவுகள் படித்து இருக்கிறேன். நல்ல முயற்சி. நல்ல சிந்தனை.

    தொடரட்டும் உங்கள் பணி. நானும் இணைந்து உங்கள் பணி

    சிறக்க முயற்சிக்கிறேன்.

    நன்றி! வாழ்த்துக்கள்.

    ரவிச்சந்திரன்-7845014471

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா12/6/14 7:32 PM

    அன்புள்ள ரவிசாய் அவர்களுக்கு,

    முதலில் உங்கள் கருத்துக்கு நான் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.உங்கள் கருத்தை பார்த்த உடனேயே உங்களிடம் பேசவேண்டும் என்று எண்ணினேன்.ஆனால் இப்போது தான் நேரம் கிடைத்தது.நான் உங்களை விரைவில் தொடர்பு கொள்கிறேன் சார்.மீண்டும் மனமார்ந்த நன்றி உங்களுக்கு.........

    எனது தொலைபேசி என்: 8124776667

    வாழ்க வளமுடன்
    இப்படிக்கு என்றும் அன்புள்ள
    உங்கள் BIGDREAMER கார்த்திக்

    பதிலளிநீக்கு

எனது பதிவுகள் உங்களை புதிய ஒரு சிந்தனையை தந்ததா நண்பரே...
அப்படியானால் உங்களுடைய கருத்தை சொல்லிவிட்டுச் செல்லுங்கள்.அது இந்தியாவின் சரித்திரத்தில் நிச்சயம் இடம்பிடிக்கும்...
நன்றி..
இப்படிக்கு
உங்கள் BIGDREAMER கார்த்திக்