(03.07.2013)
இனிய வணக்கம் நண்பர்களே.........நான் கடந்த இரண்டு வருடத்தில் (2011,2012) அதிகபட்சம் பத்து சுயமுன்னேற்ற புத்தகங்களை படித்திருப்பேன்.அவற்றின் மீது மிகுந்த பற்று கொண்டிருக்கிறேன்.
( புதிய நண்பராக இருந்தால் என்னைப் பற்றி எனும் பக்கத்தை படித்துவிட்டு வாருங்கள்.அது உங்களுக்கு ஏன் மேலும் படிக்க வேண்டும் என்பதை தெளிவு படுத்தும்.)
ஆனால் அவை ஏதோ ஒரு விஷயத்தை விட்டு விட்டதாக என்மனம் கூறிக்கொண்டே இருந்தது.அந்த உண்மையை கண்டறிய கீழ்கண்ட புத்தகமே உதவியது.மேலும் என்னை மாற்றவல்ல சக்தி இந்த புத்தகத்தில் உள்ளதைப் பார்க்கிறேன்.
"நிரந்தர வெற்றிக்கு வழிவகுக்கும் சுயப்பேச்சு"
இந்த புத்தகத்தைப் பற்றி சொல்வதற்கு முன் மீண்டும் சந்தானம் அண்ணாவிற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.ஏனென்றால் அவர்தான் இந்த புத்தகத்தை எனக்கு கொடுத்தார்.
நான் ஏன் இன்னும் என்னை மாற்றிக்கொள்ளவில்லை(நான் கனவு காணும் கார்த்தியாக) என்பதை அறிந்தேன்.ஏன் நீங்களும் கேட்பீர்கள்?
ஏன் என்றால் இந்த சமுதாயத்தின் நம்பிக்கையற்ற வார்த்தைகளால் கட்டுண்டு கிடந்ததை நானே காணவில்லை.உதாரணமாக முடியாது என்றால் "இது முடியாதா?நான் முடியும் என்றல்லவா நினைத்தேன்" என்று மனதில் எண்ணுவேன்.பிறகு எனக்குள்ளே நடக்குமா?நடக்காதா? என்ற போராட்டத்தில் ஈடுபட துவங்கி விடுவேன்.இதனால் செயல் என்பதை மறந்து முழுமையாக செயல்படாமல் இருப்பேன்.பிறகு தோல்வி வந்து என்னைப் பார்த்து சிரிக்கும்.நான் கனவுகளின் மீது நம்பிக்கை இழந்து கனவுகள் காண்பது வீண் என்று எண்ணுவேன்.எனது பன்னிரெண்டாம் வகுப்பே இப்படித்தான் சென்றது.இது உண்மை.இதுவரையில் நான் இதை யாரிடமும் பகிர்ந்ததில்லை.
+2 தேர்வு எழுதி முடித்ததில் இருந்து,முடிவு வெளிவந்ததில் இருந்து இன்று மதியம் வரை இந்த நிலையில் தான் இருந்தேன்.இந்த புத்தகம் எனக்கு புது வழியைக் காட்டியது.நான் என்னிடம் இனி பேசப்போகிறேன்.என் புரிந்துணர்வை மாற்றப் போகிறேன்.என் வாழ்வின் இனி வரும் நாள்களை வெற்றி நாட்களாக மாற்ற என்னை மாற்றப்போகிறேன்.
நீங்களும் இந்த புத்தகத்தை வாங்கி உங்கள் வாழ்வை சரியான புரிதலுடன் வெற்றியடைய விரும்பினால் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.
இந்த பதிவை எழுதும் போது இந்த புத்தகத்தை 40 பக்கங்கள் மட்டுமே படித்துள்ளேன்.எனவே அடுத்த பல பக்கங்களில் நான் கற்கப்போவதை அடுத்தடுத்த பதிவுகளில் காணலாம்.
குறிப்பு:
இந்த வலைப்பூவை என் டைரியாக எண்ணி உண்மைகளை மட்டும் கூறுகிறேன்.இந்த உண்மை தான் என் மீது உங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் என்பதால்.என் டைரிக்கு கிட்டி என்ற பழமை வாய்ந்த,எனக்குப் பிடித்த பெயரை வைத்துளேன்.
-நன்றி.....வாழ்க வளமுடன்
இப்படிக்கு
உங்கள் ராபின் கார்த்திக்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
எனது பதிவுகள் உங்களை புதிய ஒரு சிந்தனையை தந்ததா நண்பரே...
அப்படியானால் உங்களுடைய கருத்தை சொல்லிவிட்டுச் செல்லுங்கள்.அது இந்தியாவின் சரித்திரத்தில் நிச்சயம் இடம்பிடிக்கும்...
நன்றி..
இப்படிக்கு
உங்கள் BIGDREAMER கார்த்திக்