(08.07.2013)
இனிய வணக்கம் நண்பர்களே........."" நான் மனிதன் என்பதில் பெருமை கொள்கிறேன் கிட்டி.ஏனென்றால் நான் ஆறாம் அறிவைப் பெற்றிருப்பதால் தான்.நல்ல மனிதர்களை காணும் போது மனம் மகிழ்ச்சியடையும்.என்னைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு
மனிதனிடமும் நல்லவன் மட்டுமே இருக்கிறான்.அவனுடைய பயிற்றுவிப்பே அவனை தீர்மானிக்கிறது.
( புதிய நண்பராக இருந்தால் என்னைப் பற்றி எனும் பக்கத்தை படித்துவிட்டு வாருங்கள்.அது உங்களுக்கு ஏன் மேலும் படிக்க வேண்டும் என்பதை தெளிவு படுத்தும்.)
என்னுடைய பயிற்றுவிப்பு தான் என்னை உருவாக்கியுள்ளது என்பதை நான் "நிரந்தர வெற்றிக்கு வழிவகுக்கும் சுயபேச்சு" என்னும் புத்தகத்தின் மூலம் அறிந்தேன்.இதன் பிறகுதான் நான் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்? என்பதில் தெளிவு பெற்றேன்.
என்ன தெளிவு? என்று தானே கேட்கிறாய் கிட்டி.
1.இத்தனை நாள் என் வெற்றிக்கும் தோல்விக்கும் வழிவகுத்தது என் பயிற்றுவிப்புதான் என்பதை தெளிவாக புரிந்து கொண்டேன்.
2.என் பயிற்றுவிப்பை என்னால் மாற்ற முடியும் என்பதை அறிந்தேன்.என் அடுத்த வேலை எனது பயிற்றுவிப்பை மாற்றும் சுயப்பேச்சு வாசகங்களை உருவாக்குவதே.
இந்த இரண்டு தெளிவும் ஏற்பட்டவுடன் மனிதனின் சக்தியை என்னால் உணர முடிந்தது.எந்த நிலையில் உள்ளவராலும் தனது இலச்சியத்தை அடைய முடியும் என்னும் நம்பிக்கை வந்துவிட்டது கிட்டி.என் இலச்சியத்தில் நான் வெற்றி பெற்று விடுவேன் என்னும் நம்பிக்கை வந்து விட்டது கிட்டி.
இனிய இரவு வணக்கம் கிட்டி.நாளை சந்திப்போம்........""
உங்களுக்கு பயிற்றுவிப்பு என்பது என்ன? என்னும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள பதிவைப் பார்க்கவும்.
நான் இந்த விஷயத்தை அறிய பல புத்தகங்கள் படித்தேன்.அந்த புத்தகங்களின் ஆசியின் முலமே "நிரந்தர வெற்றிக்கு வழிவகுக்கும் சுயபேச்சு" எனும் இந்த புத்தகம் கிடைத்ததாக நினைக்கிறேன்.நீங்கள் இந்த விசயத்தில் அதிஷ்டசாலியாக இருக்கலாம்.நண்பர்களே நான் முன்பு கூறியதைப் போல் என் பயிற்றுவிப்பை மாற்றும் வாசகங்களை எழுதப்போகிறேன்.
மீண்டும் சந்திப்போம் ........
-நன்றி..... வாழ்க வளமுடன்
இப்படிக்கு
உங்கள் ராபின் கார்த்திக்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
எனது பதிவுகள் உங்களை புதிய ஒரு சிந்தனையை தந்ததா நண்பரே...
அப்படியானால் உங்களுடைய கருத்தை சொல்லிவிட்டுச் செல்லுங்கள்.அது இந்தியாவின் சரித்திரத்தில் நிச்சயம் இடம்பிடிக்கும்...
நன்றி..
இப்படிக்கு
உங்கள் BIGDREAMER கார்த்திக்