ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

வளமான இந்தியாவை உருவாக்க உன்னதமான வழிகள் 1 -கையேந்தி பிச்சை எடுக்கும் நம் இந்திய தாயின் குழந்தைகளின் வாழ்க்கையை மாற்ற ஒரு திட்டம் தீட்டலாம் வாங்க.....

இனிய வணக்கம் அன்பானவர்களே......... கிட்டியிடம் பேசலாமா?.......

         நண்பர்களே அந்தியூர் அனுபவம் பகுதி 4 இல் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தின் பலனே இந்த பதிவு இந்த பதிவு கண்டிப்பாக இந்தியாவுக்கு உதவும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை நீங்களும் தயங்காமல் கீழேயுள்ள விசயங்களை நம்பிக்கையோடு படியுங்கள்.உங்களை மாற்ற நீங்கள் தயாராக வேண்டும்.என்னை மாற்ற நான் தயாராகி விட்டேன்......

சரி எனது திட்டங்களைப் பார்க்கலாமா?.........

இந்த திட்டங்கள் மூலம் நமது நாட்டை மாற்ற நாம் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயம் "குழந்தைகளுக்கு காசு போடக் கூடாது" என்பதுதான்.....


( புதிய நண்பராக இருந்தால் என்னைப் பற்றி  எனும் பக்கத்தை படித்துவிட்டு வாருங்கள்.அது உங்களுக்கு ஏன் மேலும் படிக்க வேண்டும் என்பதை தெளிவு படுத்தும்.)


1.கையேந்தும் குழந்தைகளை நீங்கள் பார்த்தால் முதலில் பள்ளிக்கு போகவில்லையா?என்று கேளுங்கள்.பசியை காரணமாக சொல்வார்கள். அவர்களின் உள்ளத்தில் படிக்கும் ஆசை இருப்பதை நீங்கள் பார்க்க நேரிடலாம்.

2."உனது பெற்றோரிடம் படிக்கவைக்குமாறு கேட்டாயா?" என்று கேளுங்கள். ஆம் அல்லது இல்லை பதில்கள் கண்டிப்பாக வரும்.அந்த பதில்களுக்கு ஏற்றவாறு நீங்கள் உங்கள் வருத்தத்தை தெரிவியுங்கள்.பிறகு படிக்கும் ஆசையை இன்னும் தூண்டுங்கள்.

3.அந்த குழந்தை வளர்ந்த விதத்தைப் பற்றி விசாரியுங்கள்.அடுத்த மனிதர்களை பார்த்து குழந்தை நகராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.ஏனென்றால் அந்த பிஞ்சு மனதில் நாம் விதைக்கும் விதைதான் இந்த சமுதாயத்தையே மாற்றப்போகிறது.

4.இதை நான் சொல்வது மிக எளிது என்பதை நான் உணர்கிறேன்.இருந்தாலும் இந்த விசயத்தில் நாம் களமிரங்கியே ஆகவேண்டும்.இதில் எனக்கு ஏற்படும் அனுபவங்களை புதிய பதிவுகள் மூலம் தெரிவிக்கிறேன்.நீங்கள் பின்னுட்டம் அல்லது மின்னஞ்சல் வழியாகவும் உங்கள் அனுபவங்களை தெரிவிப்பது நலம்.

5.இப்படி குழந்தைகளிடம் பழகுவதால் பெரிய மாற்றத்தை உண்டாக்கலாம். படிக்க வயதில்லாத சிறு குழந்தைகளை நீங்கள் அதிகம் பார்க்கலாம்.அந்த பிஞ்சு நெஞ்சை தூண்ட சரியான வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள் போதும்.

6.நம்பிக்கையோடு செயல்படுங்கள்.இந்தியா நமது செயலுக்காக காத்திருக்கிறது.நீங்கள் சாதிக்கபோகிறீர்கள் என்ற எண்ணம் வேண்டும்.

7.மிகவும் எளிதான ஒரு வழி இருக்கிறது. 1௦98 என்ற இலவச எண்ணுக்கு போன் செய்து அவர்களின் விவரங்களைத் தெரிவியுங்கள்.இந்த சேவையை அரசாங்கம் செய்கிறது.இது மிக முக்கியமானது.......



   நண்பர்களே இந்த விஷயத்தை அதிகமாக சிந்தித்து குழம்பாதீர்கள்.இன்றைய சூழ்நிலை நம்மை "இது நடக்கிற காரியமா?" என்றுதான் என்ன வைக்கும். ஆதலால் நான் முதலில் இதனை சோதித்து உங்களுக்கு அனுபவங்களைக் கூறுகிறேன்.நீங்கள் முதலில் இதில் அனுபவம் பெற்றிருந்தாலும் கூறுங்கள்.
 
   உங்கள் கருத்தையும்,அனுபவத்தையும்  கூறிவிட்டு செல்லுங்கள்.இது உங்கள் தலையாய கடமை என்று சொன்னால் அது மிகையாகாது.

புதிய அனுபவங்களை விரைவில் கூறுகிறேன்......
       

  -நன்றி.....                        வாழ்க வளமுடன்

இப்படிக்கு 
உங்கள் BIGDREAMER கார்த்திக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனது பதிவுகள் உங்களை புதிய ஒரு சிந்தனையை தந்ததா நண்பரே...
அப்படியானால் உங்களுடைய கருத்தை சொல்லிவிட்டுச் செல்லுங்கள்.அது இந்தியாவின் சரித்திரத்தில் நிச்சயம் இடம்பிடிக்கும்...
நன்றி..
இப்படிக்கு
உங்கள் BIGDREAMER கார்த்திக்