ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

வளமான இந்தியாவை உருவாக்க உன்னதமான வழிகள்

இனிய வணக்கம் அன்பானவர்களே......... கிட்டியிடம் பேசலாமா?.......

         வணக்கம் நண்பர்களே!உங்களை,இந்தியாவை வளமாக்க அன்புடன் வரவேற்கிறேன்.இந்த தலைப்பில் புத்தகம் எழுதி இந்தியாவில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்று +2 படிக்கும்போது நினைத்தேன்.இப்போது அதே அளவுக்கு சிறப்பான இணையத்தில் பதிவுகளாக எழுதுவது கூடுதல் மகிழ்ச்சியை தான் அளிக்கிறது.

           சரி நண்பர்களே இந்த "வளமான இந்தியாவை உருவாக்க உன்னதமான வழிகள் " என்ற பகுதி எதற்கு?ஏன்?எப்படிவேலை செய்யும் ? என்பது போன்ற கேள்விகள் உங்களுக்கு இருக்கும்


           அதற்கான பதில்களைப் பார்ப்போம்.

முதலில் ஏன்? எதற்கு ?:

             எனது தலையாய இலட்சியமான "நமது நாட்டை வளமாக்குவது " என்ற ஆசை காரணமாக உருவாகிய தலைப்புதான் இது.இதன் மூலம் நிறைய நல்ல மனிதர்களை ஒன்று சேர்ந்து நாட்டை வளமாக்கலாம்.இந்தியனை ஒரு முனைப்போடு,நாடு எங்கு சென்றுகொண்டிருக்கிறது?என்று கவனிக்க வைக்க வேண்டும் என்பதற்காக,இந்தியன் என்ற உணர்வுடன் இணைந்து "இந்திய தாயை " மனம் குளிர வைக்க வேண்டும் என்பதற்காக இன்னும் சுருக்கமாக "இதன் மூலம் நமது நாட்டை மாற்ற முடியும் "என்று கூறலாம்.இதற்கு தான் இந்தியனாகிய உங்கள் உதவி தேவை .

எப்படி வேலை செய்யும்?:

              இன்று இணையம் பற்றி தெரியாத மனிதன் மிக அதிசயபிறவி எனலாம்.எனவே தான் இணையம் மூலம் நல்ல கருத்துகளை கூறி மக்களை ஒன்று சேர்க்க விரும்புகிறேன்.இப்பிடி சேர்க்கும் மனிதர்கள் மூலம் தினமும் bigdreamersindia -வின் பலம் அதிகரிக்கும் .அதன் மூலம் நம் நாட்டிற்கு என்ன தேவை ?எது தேவையில்லை ?என்று முடிவு செய்து களத்தில் இரங்குவோம். பிறகு நாடு தானாக வளமாகி விடும்.

இந்த பகுதியில் என்ன சொல்லப்போகிறேன்?:

               நண்பர்களே நான் இந்த வலைப்பூ (தொடங்கிய முக்கிய நோக்கமே நாட்டுக்காக தான்) எனவே எனக்கு தோன்றும் மற்றும் உண்டாகிற அனுபங்கள் மூலம் எப்படி இந்தியாவை மாற்றலாம் என்று கூறுவதே இந்த பகுதி தனிமனிதன் தன்னை மாற்றினால் தானாக நாடு மாறும் என்பதே நமது முன்னோர்களின் தத்துவம் .அதன்படி தனிநபர் தன்னை தான் மாற்ற உதவதே இந்த பகுதி .

               இதில் உங்கள் அனுபவமும் கருத்தும் மிக மிக முக்கியமானது .புதிதாக நிங்கள் கூறும் வழியும் பிளக்கரில் உங்கள் பெயருடன் வெளியிடப்படும். இதன் பலன்கள்,நிறைய இந்தியர்கள் சிந்திகத் தொடங்குவார்கள் என்பதே. நமது நாடு வளமாகும்.

              சரி நண்பர்களே .....அந்தியூர் அனுபவம் மூலம் உண்டான அனுபவத்தின் மூலம் ,தோன்றிய ஓர் அற்புதமான முதல் வழியை கீழேயுள்ள இணைப்பில் சென்று கண்டிப்பாக படியுங்கள்........

வளமான இந்தியாவை உருவாக்க உன்னதமான வழிகள் 1-கையேந்தி பிச்சை எடுக்கும் குழந்தைகளின் வாழ்க்கையை மாற்ற ஒரு முடிவு எடுப்போம்...

                நண்பர்களே,இந்தியாவை உங்களை நம்பி திரு.அப்துல்கலாம் கொடுத்ததாக நினையுங்கள்.அதுதான் உண்மையும் கூட.நான் அப்படித்தான் நினைக்கிறேன்.நீங்களும் என்னோடு சேர்ந்தது கனவுகாணுங்கள்.நமது "இந்திய தாயை " மகிழ்ச்சியாக வைத்திருக்கலாம் வாருங்கள்......


முடிவெடுப்பது உங்கள் கையில் கொடுக்கிறேன்.

        நான் இந்தியாவை வளமாக்க உதவுகிறேன்.எனது பங்கும் இருக்கட்டும் என்று நீங்கள் விரும்பினால் கிழேயுள்ள பதிவைப்  படித்து எப்போதும் BIGDREAMERSINDIA -உடன் இணைத்திருப்பது எப்படி? என்று தெரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே.....

எப்போதும் BIGDREAMERSINDIA -உடன் இணைத்திருப்பது எப்படி?

உங்களுக்காக நான் காத்திருக்கிறேன்.உங்கள் கருத்துகளையும் வரவேற்கிறேன்.......                          

 -நன்றி.....                          வாழ்க வளமுடன்

இப்படிக்கு 
உங்கள் BIGDREAMER கார்த்திக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனது பதிவுகள் உங்களை புதிய ஒரு சிந்தனையை தந்ததா நண்பரே...
அப்படியானால் உங்களுடைய கருத்தை சொல்லிவிட்டுச் செல்லுங்கள்.அது இந்தியாவின் சரித்திரத்தில் நிச்சயம் இடம்பிடிக்கும்...
நன்றி..
இப்படிக்கு
உங்கள் BIGDREAMER கார்த்திக்