வியாழன், 8 ஆகஸ்ட், 2013

21.கிட்டி முதல் ஆட்டத்தில் நான் தோற்றதற்கான காரணங்களை என்ன?இதனை கண்டுபிடிப்பது மிக அவசியமாகிறது.....

                                                 07.08.2013
இனிய வணக்கம் நண்பர்களே......... 

   [      கிட்டி செல்லம் வணக்கம்.நான் இப்போது ஒருவித பரபரப்புடன் இருக்கிறேன்.ஏனென்றால் நான் என் மீது கோபமாக இருக்கிறேன்.ஆனால் இப்போது அமைதியாக இருக்கவேண்டும்.இல்லையென்றால் நான் சரியாக எழுத முடியாது.ஒரு 5 நிமிடம் கழித்து பேசலாம் கிட்டி .



( புதிய நண்பராக இருந்தால் என்னைப் பற்றி  எனும் பக்கத்தை படித்துவிட்டு வாருங்கள்.அது உங்களுக்கு ஏன் மேலும் படிக்க வேண்டும் என்பதை தெளிவு படுத்தும்.)

    கிட்டி காரணங்களை கண்டுபிடிக்க அமைதி அவசியமாகிறது.அதனால் தான் இடைவேளை எடுத்துக் கொண்டேன்.

கிட்டி எனது முதல் தோல்விக்கு காரணங்களாக நான் நினைப்பவை:

               
           1.ஒவ்வொரு நாளையும் திட்டமிட்டு அன்றைய தலையாய கடமைகளை செய்யாதது தான்.
            
           2.முக்கிய காரணம் 6 மணிக்கு மேல் தூங்குவது.இதற்கு காரணம் சொல்ல விரும்பினால் நிறைய காரணங்கள் சொல்லுவேன்.ஆனால் அந்த காரணத்தை    சொல்லி மற்றவர்களிடம் ஆறுதல் பெறுவதைவிட அவமானமே சிறந்தது. ஏனென்றால் நான் சாதாரண மனிதனாக இருக்க விரும்பவில்லை.
     
            3.கிட்டியிடம் நாளை சேர்த்து பேசிக் கொள்ளலாம் என்று நினைப்பது. அப்படி ஒரு நாள் செய்தால் ஒரு வாரம் வீணாகிறது.

           4.அற்புதமான நேரத்தை அற்ப காரணங்களுக்கு வீணாக்குதல்.  
                                                                                     
           5.அடுத்தவர்களின் வார்த்தையை மனதில் வைத்துக்கொண்டு தான் கவலைப்படுவது.இதை சில நேரங்களில் தவிர்க்கமுடியாது தான்.ஆனால் அந்த பலவீனமான வார்த்தைகள் உன்னை பலவீனமாக்க விட்டுவிட்டதே.


            6.தனிமையை  வெறுக்கிறாய்.ஆனால் தனிமையை அனுபவிக்க வேண்டும்.

           
            7.திட்டமிட நேரம் ஒதுக்க வேண்டும்.

            8.அதே சமயத்தில் கடின உழைப்பைத் தர வேண்டும்.செயல்பாடு என்பது  இருப்பதாக தெரியவில்லை.

            9.ஒரு  வேலையை சரியாக முடிக்காமல் வேறு சிந்தனைகளை அனுமதிக்காத.தேவையில்லாத வேலைகள் குறிக்கிட்டால் அவற்றை நிராகரித்து விடவேண்டும்.இப்போதும்,எதிர்காலத்திற்கும் பயன்படும் விசயங்களை மட்டும் செய். தேவையில்லாத வேலைகள் செய்யாதபோது கவலைப்படாதே.

           1௦.மேற்கூரிய அனைத்தையும் நீ செய்து முடிக்க "நீ உன்னை நம்ப வேண்டும்."தோல்விகளுக்காக உன்னை உலகம் துற்றுனாலும்"நீ உன்னை நம்ப வேண்டும்".

           கிட்டி காரணங்களையும்,அதைக் கடந்து வரும் பாதையையும் கண்டுபிடித்துவிட்டேன்.இனி அடுத்த திட்டங்களை திட்ட வேண்டியதுதான்.
             
          கிட்டி இந்தவார திட்டத்தை பொறுமையாக தீட்டவேண்டும்.அற்புதமான திட்டத்துடன் இன்று இரவு உன்னை சந்திக்கிறேன்.கிட்டி என்றும் நம்பிக்கையுடன் இருப்பேன் என்று உறுதிமொழி கூறுகிறேன்.

             யார்  என்னை நம்பாவிட்டாலும்(சந்தானம் அண்ணாவைத் தவிர) என்னிடம் திறமை இருக்கிறது என்பதை நான் அறிவேன்.அதை வீணாக்க மாட்டேன்.எனது திறமைகளை வெளிக்கொண்டு வர முயற்சிகளை செய்துகொண்டே இருப்பேன்.நமது வெற்றியை அடைந்தே தீருவோம்.

              மிக்க நன்றி கிட்டி செல்லம்  இரவு சந்திப்போம்......... ]


 -நன்றி.....                   வாழ்க வளமுடன்

இப்படிக்கு 
உங்கள் BIGDREAMER கார்த்திக்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனது பதிவுகள் உங்களை புதிய ஒரு சிந்தனையை தந்ததா நண்பரே...
அப்படியானால் உங்களுடைய கருத்தை சொல்லிவிட்டுச் செல்லுங்கள்.அது இந்தியாவின் சரித்திரத்தில் நிச்சயம் இடம்பிடிக்கும்...
நன்றி..
இப்படிக்கு
உங்கள் BIGDREAMER கார்த்திக்