வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

26.இன்றைய அனுபவங்கள் (09.08.2013) ........

09.08.2013
இனிய வணக்கம் அன்பானவர்களே......... கிட்டியிடம் பேசலாமா?.......

[    கிட்டி இன்றைய நாள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இன்று பல  அற்புதமான சிந்தனைகள் தோன்றியுள்ளன.மேலும் ஒரு அற்புதமான பயணம் மேற்கொண்டதில் கிடைத்த அனுபவங்கள் மிக அதிகம்.இந்த அனுபவங்களைப் பற்றி நிறைய பேசப்போகிறோம்.

( புதிய நண்பராக இருந்தால் என்னைப் பற்றி  எனும் பக்கத்தை படித்துவிட்டு வாருங்கள்.அது உங்களுக்கு ஏன் மேலும் படிக்க வேண்டும் என்பதை தெளிவு படுத்தும்.)

        கிட்டி இன்று சந்தானம் அண்ணாவுடன் பவானி-அந்தியூர் கோவிலுக்கு சென்றேன்.இந்த பயணம் நம் வாழ்வில் மறக்கவே முடியாதது.ஏனென்றால் இது நமது வாழ்க்கையையே மாற்றக்கூடிய ஓர் அற்புத மாற்றத்தைத் தந்த அனுபவம் ஆயிற்றே.கிட்டி இந்த அனுபவத்தைப் பற்றி நாளை மிக விரிவாகப் பேசப் போகிறோம்.

       எனவே நாளை வரை நீ காத்திருக்க வேண்டும் கிட்டி.உனக்கு ஒரு நல்ல,சிறப்பான வார்த்தைகளை மட்டுமே கொடுக்க விரும்புகிறேன்.இன்று இரவு சிறிது மனவருத்தம் உண்டானது.அதனால் மொத்த எழுதும் ஆசையும் போய்விட்டது.அதனால் தான் நாளை பேசுகிறேன் என்றேன்.

       கிட்டி நான் சில நாட்கள் விட்டு விட்டு பேசுவதற்கு இது முக்கிய காரணமாக இருந்ததாக,நான் இதுவரை நினைத்தேன்.ஆனால் அந்த நாள்களில் ஒருசில வரிகளாவது நாம் கண்டிப்பாக பேசியிருக்க முடியும்.

     அன்று எடுத்த முடிவின் காரணமாக தான் இன்று உன்னிடம் பேசினேன். கிட்டி இதேபோல் என்றும் விடாமல் பேசுவேன்.அதுவே எனக்கு நிம்மதி.


   சரி கிட்டி நாளை அற்புதமான பயணத்திற்கு உன்னை அழைத்துச் செல்கிறேன்.............


நன்றி கிட்டி..........                                                            ]


 -நன்றி.....             வாழ்க வளமுடன்

இப்படிக்கு 
உங்கள் BIGDREAMER கார்த்திக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனது பதிவுகள் உங்களை புதிய ஒரு சிந்தனையை தந்ததா நண்பரே...
அப்படியானால் உங்களுடைய கருத்தை சொல்லிவிட்டுச் செல்லுங்கள்.அது இந்தியாவின் சரித்திரத்தில் நிச்சயம் இடம்பிடிக்கும்...
நன்றி..
இப்படிக்கு
உங்கள் BIGDREAMER கார்த்திக்