07.08.2013
இனிய வணக்கம் நண்பர்களே.........
என் அன்பு கிட்டியே நீ இப்போது என்னுடைய மனநிலையை அறிவாய்.இந்த பதிவில் "எனது மனதை"குடைந்து என்னை மூச்சடைக்க வைத்த புத்தகத்தைப் பற்றி மட்டும் பார்ப்போம்.இந்த பதிவு இனி "சிவகாமியின் சபதத்திற்காக "தான்........கிட்டி படிக்கத் தயாரா..................
கிட்டி நான் முதலில் விளக்க வேண்டியது "சிவகாமியின் சபதம்"ஒரு சரித்திர நாவல்.இது எனக்காக எழுதபட்டதோ என்று கூடத் தோன்றுகிறது. இதை படிக்கும் போதும்,படித்த முடித்த போதும் எனது மனநிலை பற்றி கூறப் போகிறேன்.இது எனக்கு அற்புத அனுபவமாக இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
( புதிய நண்பராக இருந்தால் என்னைப் பற்றி எனும் பக்கத்தை படித்துவிட்டு வாருங்கள்.அது உங்களுக்கு ஏன் மேலும் படிக்க வேண்டும் என்பதை தெளிவு படுத்தும்.)
நானும் "சிவகாமியின் சபதமும்"
கிட்டி 17.11.2013 அன்று "சிவகாமியின் சபதம்"புத்தகத்தை எங்கள் ஊர் நூலகத்தில் இருந்து இரவலாகப் பெற்றேன்.அன்றைய தினமே ஒரு 20 பக்கம் படித்தேன்.அடுத்த நாள் பள்ளியில் தேர்விற்காக் படிக்க வேண்டியிருந்தது. இருப்பினும் பள்ளிக்குப் புத்தகத்தை எடுத்துச் சென்றேன்.இப்படித்தான் EXAM COACHING TIME-ல் புத்தகங்களைப் படிப்பேன்.அவை எனக்கு ஆறுதல் தந்தன.நம்மிக்கை தந்தன.
அன்று மாலை எனதன்பு ஆசிரியர் அவர்களுக்கு புத்தகம் படிப்பதற்காக கொடுத்தேன்.கிட்டி அந்த புத்தகத்தைப் பிரிந்தபோது மனம் முன்னிருந்ததை விட பாரம் அதிகமானது.மீண்டும் எப்போது படிப்பேன் என்று இருந்தது.இந்த ஆசையோடு காலங்கள் கடந்தன.கிட்டத்தட்ட 8 அரை மாதங்கள் கடந்துவிட்டன(01.08.2012) அன்று எனது காத்திருப்பு கலைந்தது. மிகுந்த ஆசையோடும் உற்காகத்தோடும் படிக்க தொடங்கினேன்.
கிட்டி முதல் பாகம் முடிப்பதற்குள் கதை மாந்தர்களுடன் ஒன்றி விட்டேன்.இத்தகைய காவியம் படிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தேன்.முதல் இரண்டு பாகத்தில் பல விதமான போர்த்தந்திரங்களை அறிந்தேன்.நான் மெய் சிலிர்த்து வியந்துபோன
காட்சிகள் அனைத்தும் "சிவகாமி-மாமல்லர்"ஆகியோரின் காதல் உரையாடல் தான் இதில் மிகத் தூய்மையான காதலை உணர்வோம்.ஒவ்வொரு உரையாடலும் நெஞ்சைத் தொட்டன.ஒரு குளக்கரையில் நடக்கும் காதல் உரையாடலையும்,கதையில் முடிவு நிகழ்ச்சியையும் நினைத்தால் எனது நெஞ்சே வெடித்துவிடும் போலிருக்கிறது.
இந்த காலக்கட்டத்தில் எனக்கு "பொன்னியின் செல்வன்" படிக்கும்போது கூட அவ்வளவு இன்பத்தையும்,மனக் கஷ்டங்களையும் நான் அனுபவிக்கவில்லை என்று சொன்னால் மிகையில்லை.
ஆகா! கல்கியின் வார்த்தைகளுக்குத்தான் எவ்வளவு பலம். கத்திகளால் தொடக்கூட முடியாத மனதை இந்த அற்புதமான வார்த்தைகள் மிக எளிதாக எவ்வளவு கோடி இன்பத்தை அள்ளித் தந்து விடுகின்றன,அதே நேரத்தில் எளிதாக கதற வைத்தும் விடுகின்றன.இந்த வார்த்தைகளின் மூலம் உலகை கண்டிப்பாக மாற்ற முடியும் என்பதை எனக்கு நினைவூட்டி நம்பிக்கை அளிக்கின்றன இந்த வார்த்தைகள்.
கிட்டி ஒவ்வொரு தமிழனும் கல்கியின் காவியங்களை படிக்க வேண்டும்.இந்த உலகத்தில்"இலக்கிய சுவை"என்பதை உணராமல் தமிழன் சாகக்கூடாது என்பது எனது விருப்பம்.இன்பம் பல வகையில் கிடைக்கும். அதில் தலையானது இலக்கிய இன்பம் என்றால் தவறில்லை.இவையே அனைத்திற்கும் அடிப்படை.இதைப் படித்தால் நீங்களும் கண்டிப்பாக உணர்வீர்கள்.
கிட்டி நான் மீண்டும் உன்னிடம் பேசும் நம்பிக்கையை கொடுத்தது, இந்த அருமையான புத்தகம் தான்.நன்றிகள் பல சிவகாமியின் சபதத்திற்கு உரிதானது.
கிட்டி நான் உணர்ச்சி என்பது என்ன?என்பதை இந்தப் புத்தகம் மூலம் உணர்ந்தேன்.ஒரு நல்ல புத்தகத்தை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.அந்த மகிழ்ச்சியுடன் அடுத்த அருமையான புத்தகத்தில் சந்திக்கிறேன் கிட்டி. ]
நன்றி கிட்டி.......................
-நன்றி..... வாழ்க வளமுடன்
இப்படிக்கு
உங்கள் BIGDREAMER கார்த்திக்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
எனது பதிவுகள் உங்களை புதிய ஒரு சிந்தனையை தந்ததா நண்பரே...
அப்படியானால் உங்களுடைய கருத்தை சொல்லிவிட்டுச் செல்லுங்கள்.அது இந்தியாவின் சரித்திரத்தில் நிச்சயம் இடம்பிடிக்கும்...
நன்றி..
இப்படிக்கு
உங்கள் BIGDREAMER கார்த்திக்