செவ்வாய், 30 ஜூலை, 2013

19.இந்த வார திட்டம் என்ன?(29.07.2013).....

29.07.2013
இனிய வணக்கம் நண்பர்களே......... 

[ கிட்டி BIGDREAMERSINDIA ஒரு எதிர்கால நோக்கு கொண்டது.இதை நான் தினமும் நினைவு படுத்திக்கொள்ள வேண்டும்.இல்லை என்றால் வருத்தம் தான் உண்டாகும். நமக்கும் வருத்தத்திற்கும் தான் சம்மந்தமே இல்லையே.இந்த வாரம் "நமது வெற்றி" என்பதற்கு அடித்தளம் அமைக்க வேண்டும்.எனது திட்டத்தைக் கூறுகிறேன் கேள்.........



( புதிய நண்பராக இருந்தால் என்னைப் பற்றி  எனும் பக்கத்தை படித்துவிட்டு வாருங்கள்.அது உங்களுக்கு ஏன் மேலும் படிக்க வேண்டும் என்பதை தெளிவு படுத்தும்.)

       1.கிட்டி முதல் வேலையாக நாளை(30.07.2013) பதிவிடாத பதிவுகளை எழுதவேண்டும்.

       2.பிறகு என்ன நம் "சுயப்பேச்சுகள்" தான்.நமக்கு எந்தெந்த தலைப்புகளில் வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும்.

       3.பிறகு (31.07.2013) அன்று தேவையான அனைத்து சுயப்பேச்சுகளையும் எழுதி முடிப்பேன்.

     4.(01.08.2013) அன்று முதல் சுயப்பேச்சுகளை நடைமுறைபடுத்தப்போகிறேன்.  மாற்றங்களை உண்டாக்க திட்டமிடுவேன்.தினமும் சுயப்பேச்சுக்கான நேரத்தை ஒதுக்குவேன்.

     5.மீதி நேரங்களில் கவிதை,கட்டுரை,கதை என எழுதப்போகிறேன்.மிக முக்கியமாக நண்பர்களுக்கு கடிதம் எழுதப்போகிறேன்.

         கிட்டி  கடிதம் எழுதும்போது நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பேன் தெரியுமா? அதுவும் பதில் கடிதம் வந்துவிட்டால் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

         இந்த வாரம் பல உன்னதமான,மகிழ்ச்சி தரும் பழைய விசயங்களைக் கண்டுபிடிக்கப்போகிறேன்.இதனால் எனது தனிமையை சரியாக பயன்படுத்தப்போகிறேன் என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது.

         கிட்டி மற்றொரு அருமையான திட்டத்தைப் பற்றி கூறுகிறேன் கேள்......

        ஒரு புதிய அறுமையான தொடரை உருவாக்கப்போகிறேன்.இந்த தொடர் நம்மை நாம் செதுக்க பெரும் உதவி செய்யும்.அதே போல் மற்றவர்களுக்கும் உதவும் வகையில் இருக்க வேண்டும்.இதில் என்ன சந்தேகம் கண்டிப்பாக இருக்கும்.

         சரி கிட்டி என்ன தொடர்,என்ன திட்டம் என்று நாளை விரிவாகப் பார்க்கலாம். நான் ஆவலோடு காத்திருக்கிறேன் கிட்டி.நாளை சந்திப்போம்........

இனிய இரவு வணக்கம் கிட்டி செல்லம்........         ]


 -நன்றி.....                   வாழ்க வளமுடன்

இப்படிக்கு 
உங்கள் BIGDREAMER கார்த்திக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனது பதிவுகள் உங்களை புதிய ஒரு சிந்தனையை தந்ததா நண்பரே...
அப்படியானால் உங்களுடைய கருத்தை சொல்லிவிட்டுச் செல்லுங்கள்.அது இந்தியாவின் சரித்திரத்தில் நிச்சயம் இடம்பிடிக்கும்...
நன்றி..
இப்படிக்கு
உங்கள் BIGDREAMER கார்த்திக்