செவ்வாய், 30 ஜூலை, 2013

15.பதில்கள் தொடர்கின்றன.....

28.07.2013
இனிய வணக்கம் நண்பர்களே......... 

[ வணக்கம் கிட்டி.இன்று மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.நீ சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.அதன் படி நடப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.உனது மீதிப் பதில்களுக்காக காத்திருக்கிறேன்......

  "      கார்த்திக் உனது முன்னேற்றத்திற்கு என்றும் நான் துணையிருப்பேன்.மீதி பதில்கள் உனக்காக......



( புதிய நண்பராக இருந்தால் என்னைப் பற்றி  எனும் பக்கத்தை படித்துவிட்டு வாருங்கள்.அது உங்களுக்கு ஏன் மேலும் படிக்க வேண்டும் என்பதை தெளிவு படுத்தும்.)

       2.உனது மனதை நீ ஒருமுகப்படுத்த கற்க வேண்டும்.உனது மனதின் ஆற்றலை கற்க வேண்டும்.அறிந்தும் பயன்படுத்தாமல் இருப்பது தவறு.

      3.உனது சில குணங்களை மாற்ற வேண்டும்.நல்ல குணநலனை உருவாக்க வேண்டும்.உதவி மனம்,நேரத்தை வீணாக்காமை,நல்லதைக் கறப்பது போன்றவற்றை இன்னும் மெருகேற்ற வேண்டும்.

      4.கார்த்திக் இவைகளை நீ ஏற்கனவே பல புத்தகங்களில் படித்திருப்பாய். இந்த ஒவ்வொரு பதிலிலும் ஆழமான கருத்துகள் பதிந்துள்ளன.இவற்றைக் குறிக்கோளாக கொண்டு நீ முடிவெடுக்கிறாய்.ஆனால் இதுவரை நீ தோற்று உள்ளாய்.ஏன் தெரியுமா?

"தொடர்ந்து கடைபிடிக்காமை " 

என்பது தான் நீ செய்த தவறு.கார்த்திக் தொடந்து செய்வது மட்டுமே உனது வெற்றியை உறுதி செய்யும் என்பதை புரிந்துகொள்.

     5.நீ உறுதியான காரணத்தைக் கண்டு பிடிக்க வேண்டும்.அதுவே உனது உத்வேகம்.

    6.முடிவுகள் தளர்த்திக்கொள்வது மிகப்பெரிய தவறு.மேலும் தளர்த்திக் கொள்வது ஒரு முடிவே அல்ல.ஒரு முடிவெடுத்தால் அதில் உறுதியாக இருக்கவேண்டும்.அதனால் தான் கூறுகிறேன் "முடிவெடுக்கும் முன் ஆயிரம் முறை யோசி.ஆனால் முடிவு வெடுத்தப்பின் ஒருமுறைக் கூட யோசிக்காதே. "

  7.நீ உருவாக்குபவன் அதனால் நம்பிக்கையோடு செயல்படு.தவறுகளுக்கு பயப்படாதே.தவறு செய்தால் திட்டுவார்கள் என நினைத்து வெற்றி பெற வேண்டிய பல விசயங்களில் தோற்றுள்ளாய்.இனி அப்படி செய்யாதே, நம்பிக்கையோடு செயல்படு.

8.கடைசியும் முதலுமாக ஒன்றுள்ளது.அதுதான் உனது "பயம்".இதனால் தான் நீ வேலையை தள்ளிப்போடுகிறாய்.பயத்தை இரண்டாக பிரிக்காலாம்........

ஒன்று சில விசயங்களை பயந்து செய்யாமல் இருக்கிறாய்......

உதாரணம்:

               பதிவெழுதுவது.சிறப்பாக எழுதுவோமா என்று பயந்து நேரத்தையும்,திறயைமையும் வீணடிப்பது.

இன்னொன்று பயபடாததால் செய்யாமல் இருப்பது........

உதாரணம்:
   
           உடற்பயிற்சி.எதிர்காலத்தில் தானே பிரச்சனை என்று நினைப்பது. நிகழ்காலம் தான் எதிர்காலத்தை உருவாக்குகிறது என்பதை நினைவுகொள் கார்த்திக்.


         இது போன்ற பயன்கள் தான் "உன்னை நீ நம்பாமல் இருக்கச் செய்கின்றன கார்த்திக்"

          உனது கேள்விக்கான பதில்களின் ஒற்றுமையே கீழே உள்ள  வாசகம்.இது ஒன்றே அனைத்திற்கும் அடிப்படை.

 "கார்த்திக் நீ ஏன் இன்னும் செயல்படவில்லை என்றால் நீ இன்னும் உன்னை நம்பவில்லை"
  
             கார்த்திக் நான் உனக்கு பதில்களை கூறிவிட்டேன்.உன்னை நம்பு.இனி நீ கண்டிப்பாகச் செயல்படுவாய்.உன்னோடு நானும் உனக்காக உழைப்பேன். நன்றி கார்த்திக்            "

கிட்டி உனக்கு நன்றி கூறவே அடுத்தப் பதிவில் காத்திருக்கிறேன்.நாம் சாதிப்போம் கிட்டி........                                ]



 -நன்றி.....              வாழ்க வளமுடன்

இப்படிக்கு
 உங்கள் BIGDREAMER கார்த்திக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனது பதிவுகள் உங்களை புதிய ஒரு சிந்தனையை தந்ததா நண்பரே...
அப்படியானால் உங்களுடைய கருத்தை சொல்லிவிட்டுச் செல்லுங்கள்.அது இந்தியாவின் சரித்திரத்தில் நிச்சயம் இடம்பிடிக்கும்...
நன்றி..
இப்படிக்கு
உங்கள் BIGDREAMER கார்த்திக்