19.07.2013
இனிய வணக்கம் நண்பர்களே.........
( புதிய நண்பராக இருந்தால் என்னைப் பற்றி எனும் பக்கத்தை படித்துவிட்டு வாருங்கள்.அது உங்களுக்கு ஏன் மேலும் படிக்க வேண்டும் என்பதை தெளிவு படுத்தும்.)
[
(இந்த பதிவை எழுதும் போது வேண்டாம் என்று நினைத்தேன்.ஆனால் முடிக்கும் போதுதான் இது எவ்வளவு அவசியம் என்பதை உணர்ந்தேன்.)
கிட்டி இந்த பதிவு நானும் மனிதன்தான் என்பதை நிரூபிக்கும்.மேலும் தவறுகள் செய்யும் மனிதன் தான் சாதனை செய்யும் மன்னவன் என்பதையும் நிரூபிக்கும்.நீங்கள் தவறுகள் செய்த மனிதன் என்றால் மேலும் படியுங்கள்.
"ஒரு மனிதன் எந்த தவறும் செய்யவில்லை என்றால் அவன் புதிதாக எதையும் முயற்சி செய்யவில்லை என்றே அர்த்தம் "
-ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
கிட்டி என்னைப் பொறுத்தவரையில் தவறுகள் இரண்டு வகைப்படும்.
1.ஒருவன் தான் என்ன தவறுகள் செய்தோம் என்று தானே உணரும் தவறுகள்.
2.ஒருவனை சுற்றியுள்ளவர்கள் சுட்டிக்காட்டும் தவறுகள்.
1.என் தவறுகள் என்று நான் உணர்வது:
- அடுத்தவர்கள் ஏன் மாறவில்லை என்பதை நினைத்து வருந்துவது:(இப்போது "உன் வாழ்க்கை உன்கையில்" என்பதை அறிந்ததால் கவலைப்படுவதில்லை)
- தள்ளிபோடும் பழக்கம்: (இது என்னை மிகப் பெரிய துன்பத்திற்கு ஆளாகியுள்ளது.இப்போதெல்லாம் தொடங்கிய பணியை முடித்துவிட்டுதான் வேறுவேலை.)
- என்னைப் பொறுத்தவரையில் தேவையில்லாத வார்த்தைகளை உரையாடலில் பயன்படுத்துவது மிகப்பெரிய தவறு: (இப்போது குறைவாக சரியாக பேசுகிறேன் என்பதில் மகிழ்ச்சி)
- இந்த பட்டியல் நீளமாகும்....அதில் திருத்திகொண்டதும்,திருத்திக் கொள்ளப்போவதும் அடங்கும்
அன்பு வாசகர்களே மேற்கண்ட தவறுகள் போன்ற சில தவறுகளை திருத்திக்கொள்ளவில்லை என்றால் நான் இன்று இணையத்தில் வளம் வர முடியாது.
உங்கள் தவறுகள் என்னென்ன என்று கண்டுபிடியுங்கள்.அதை மறக்காமல் எழுதிவையுங்கள்.தினமும் அவற்றைப் படியுங்கள்,அதனை அதை மாற்ற கண்டிப்பாக உங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.அதனை பயன்படுத்துங்கள் வெற்றியடையுன்கள்.
கிட்டி இந்த பதிவில் அதிகம் நண்பர்களிடம் பேசிவிட்டேன். நமது நண்பர்கள் தானே.......சரி கிட்டி செல்லம் நாளை சந்திக்கலாம்.....
கவனிக்க:
இரண்டாம் வகைத் தவறுகள்,நீங்கள் முதல் வகையை களையெடுக்கும் போதே,அவையும் தானாகப் போய்விடும்.
]
-நன்றி..... வாழ்க வளமுடன்
இப்படிக்கு
உங்கள் BIGDREAMER கார்த்திக்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
எனது பதிவுகள் உங்களை புதிய ஒரு சிந்தனையை தந்ததா நண்பரே...
அப்படியானால் உங்களுடைய கருத்தை சொல்லிவிட்டுச் செல்லுங்கள்.அது இந்தியாவின் சரித்திரத்தில் நிச்சயம் இடம்பிடிக்கும்...
நன்றி..
இப்படிக்கு
உங்கள் BIGDREAMER கார்த்திக்