19.07.2013
இனிய வணக்கம் நண்பர்களே.........
நான் புதிய திட்டத்தோடு களம் இறங்கியுள்ளேன்.எனது களத்தின் முதல் அடிதான் இந்த பதிவு படித்து மகிழுங்கள்.
( புதிய நண்பராக இருந்தால் என்னைப் பற்றி எனும் பக்கத்தை படித்துவிட்டு வாருங்கள்.அது உங்களுக்கு ஏன் மேலும் படிக்க வேண்டும் என்பதை தெளிவு படுத்தும்.)
[
எப்படி BIGDREAMERSINDIA உன் வாழ்க்கையாகும்? என்று கேட்கிறாயா கிட்டி.காரணத்தை சொல்கிறேன் கேள் கிட்டி செல்லம்.
கிட்டி எப்போதும் என் மனதுக்குள் உள்ளுர இருந்துகொண்டு இருக்கும் ஆசை அடுத்தவர்களை சாதிக்க வைக்கவேண்டும் என்பதுதான்.இதில் நான் என்ன செய்ய வேண்டும்?எப்படி செய்தால் ஆசையை அடையலாம்?.....இப்படி பல வழிகளை யோசிக்காமல் பல சுய முன்னேற்ற புத்தகங்களைப் படித்தேன்.
இவை மூலம் மற்றவர்களை மாற்ற உதவி செய்தேன்.என்னை மாற்ற நான் நேரம் எடுத்துக்கொண்டதை விட மற்றவர்களை சாதிக்க வைக்கும் ஆசையில் அவர்களுக்கு அதிக நேரம் கொடுத்தேன்.ஆனால் அவர்களிடம் குறிப்பிட்ட மாற்றம் இல்லை என்பதை உணர்ந்து, என்னைப் பார்த்தேன்.என்னிடமும் மாற்றங்கள் இல்லை என்பதை உணர்ந்தேன்.
"இது நல்ல அனுபவம்"
இப்போது என்னை நான் கவனிக்கிறேன்.ஆனால் மற்றவர்களை கவனிக்க முடியவில்லை.அப்போதுதான் தெரிந்தது ஒரு இரகசியம்.அதை அறிய கீழே பார் கிட்டி.
"ஒரு மனிதனை எவ்வளவு பெரிய சாதனையாளர் நினைத்தாலும் மாற்ற முடியாது.ஆனால் அவன் நினைத்தால் எவ்வளவு பெரிய சாதனையும் செய்யலாம்"
இந்த வாசகம் நிம்மதியை அளித்தது,இருப்பினும் "மற்றவர்களை சாதிக்க வைக்க வேண்டும் "என்னும் தணியாத ஆசை மனிதில் இருக்கிறது.அது என்றும் இருக்கும்.இதற்காக நான் ஒரு புதிய வழியை கண்டுபிடித்தேன்.
அந்த வழிதான் BIGDREAMERSINDIA
BIGDREAMERSINDIA இந்தியாவின் சிறந்த தளமாக மாறும்.அந்த நம்பிக்கை எனக்கு உண்டு.
எப்படி இது சாத்தியம் என்கிறாயா? கிட்டி....
கிட்டி இப்போது என்னை சுற்றியுள்ளவர்கள் மட்டுமல்லாமல் இந்தியாவே எனது அனுபவத்தைப் பார்க்கும்.அதுதான் எனது வெற்றியும் கூட.இதனால் அவர்களை அவர்கள் மாற்ற ஏதாவது ஒரு வழி கிடைக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்.அந்த வழியில் அவர்களை வெற்றி தேடி வரும்.
இனி என்ன செய்யப் போகிறேன்?
இனி சுயப்பேச்சுகள் பலவற்றை எழுதப்போகிறேன்.அவற்றை உன்னிடம் பகிரப்போகிறேன்.என்னை சிறப்பாக மேம்படுத்துகிறேன்.
அதனால் தான் கூறுகிறேன்.
"இனி BIGDREAMERSINDIA தான் என் வாழ்க்கை"
என் இந்த வாழ்க்கை அனுபவங்கள் அனைவருக்கும் உதவும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.பயன்பெற்றால் மிக்க மகிழ்ச்சியடைவேன்.
மீண்டும் நினைவுபடுத்திக்கொள்கிறேன்.......
"யாரையும் என்னால் மாற்ற முடியாது அது அவர்களால் தான் முடியும்"
மீண்டும் சந்திப்போம் கிட்டி.......
]
-நன்றி..... வாழ்க வளமுடன்
இப்படிக்கு
உங்கள் BIGDREAMER கார்த்திக்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
எனது பதிவுகள் உங்களை புதிய ஒரு சிந்தனையை தந்ததா நண்பரே...
அப்படியானால் உங்களுடைய கருத்தை சொல்லிவிட்டுச் செல்லுங்கள்.அது இந்தியாவின் சரித்திரத்தில் நிச்சயம் இடம்பிடிக்கும்...
நன்றி..
இப்படிக்கு
உங்கள் BIGDREAMER கார்த்திக்