திங்கள், 8 ஜூலை, 2013

4.பயிற்றுவிப்பு என்பது என்ன?

(08.07.2013)

இனிய வணக்கம் நண்பர்களே.........

"" வணக்கம் கிட்டி இன்று  இந்த பதிவு எனது நண்பர்களுக்கு ஒரு கல்வியையும் ,எனக்கு ஒரு மகிழ்ச்சியையும் தரப்போகிறது."நிரந்தர வெற்றிக்கு வழிவகுக்கும் சுயப்பேச்சு"  எனும் மகத்தான புத்தகத்தின் ஆசிரியரான SHAD HELMSTETTER  பயிற்றுவிப்பைப் பற்றி என்ன கூறுகிறார்
என்பதைப் பற்றிப் பார்ப்போம்.


( புதிய நண்பராக இருந்தால் என்னைப் பற்றி  எனும் பக்கத்தை படித்துவிட்டு வாருங்கள்.அது உங்களுக்கு ஏன் மேலும் படிக்க வேண்டும் என்பதை தெளிவு படுத்தும்.)

 பயிற்றுவிப்பைகீழே உள்ள  ஓர் உதாரணம் தெளிவாக விளக்கும்.
         
             இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.அதில் ஒருவருக்கு "நீ ஒரு சாதனையாளன்.நீ சாதிப்பதற்காக பிறந்திருக்கிறாய்.நீ அன்பானவன்,அறிவானவன்ஆற்றல் மிக்கவன்.."என்பது போன்ற நல்ல நேர்மறையான வார்த்தைகளைக் கேட்டு வளர்கிறது.

               இன்னொரு குழந்தை "நீ எதற்கும் தகுதி இல்லாதவன்.நீ முட்டாள்.நீ பிறந்ததே வீண்.நீ மாட்டு மேய்க்க தான் தகுதியானவன்....." என்பது போன்ற எதிர்மறை எண்ணங்களால் வளர்க்கப்படுகிறது.

            நீங்களே கூறுங்கள் இதில் எந்த குழந்தை வாழ்வில் வெற்றிபெறும் என்று.இதுதான் நண்பர்களே பயிற்றுவிப்பு.நம்முடைய பெற்றோரும், மற்றவர்களும் அவர்களுக்குத் தெரியாமலேயே நமது வாழ்வை மாற்றுகின்றனர்.

இங்கு நாம் அறிய வேண்டியது என்னவென்றால்?

     நம்மை பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்களோ அல்லது அதிக முறை  நாம் அதை கேட்பதாலோ   அதையே நாம் உண்மை என்று நம்புகிறோம்.நாம் எதை நம்புகிறோமோ அதைப் போலவே நம் மனம் நம்மை மாற்ற வேலை செய்கிறது.

என்னை நான் சாதனைமனிதன் என்று நம்புகிறேன் அதனால் என்மனம் அதற்கான வழிகளை ஆராய்கிறது.என்னை அந்த வழியில் கூட்டி செல்கிறது.
நீங்கள் உங்களை என்னவாக மாற்ற வேண்டும் என்று உங்களிடம் சொல்கிறீர்களோ அதுபோலத் தான் உங்கள் மனம் உங்களை மாற்றும்.இது ஒரு கண் கட்டி வித்தை அல்ல.மனிதனின் உண்மையான சக்தி இது.இதை பயன் படுத்தலாம?வேண்டாமா?என்று முடிவெடுப்பது உங்கள் கையில்.நான் பயன்படுத்துவது என்று முடிவெடுத்துவிட்டேன்.நீங்களும் என் அடுத்தடுத்த பதிவுகளின் மூலமாக இந்த பயிற்றுவிப்பைப் பெற்று சாதிக்கலாம்.

நண்பர்களே  மனிதனின் நிம்மதியான  வாழ்வு கீழ்கண்ட வார்த்தைகளில் அடங்கியுள்ளதாக நான் உறுதியாக நம்புகிறேன்.

"செய் அல்லது செத்துமடி(DO OR DIE)
முயற்சி செய்  அல்லது ஓரமாக உட்கார்ந்து அழு(DRY OR CRY)"

இவற்றிற்கு பெரிய வித்தித்தியாசமில்லை.நண்பர்களே நாம் முயற்சி செய்யத்தான் பிறந்திருக்கிறோம் என்பதை மறக்காதீர்கள்.இந்த நொடியிலும் நீங்கள் முடிவெடுக்கலாம் உங்கள் வாழ்வை ஒளிமையாக்க.முயற்சி என்பது முயற்சி செய்யாமல் இருப்பதை விட எளிது நண்பர்களே.....


என்னோடு வாருங்கள் நம் வாழ்க்கை நம் கையில் என்பதை நிருபித்துக் காட்டுவோம்.

 மீண்டும் சந்திப்போம் கிட்டி இரவு வணக்கம்.....



 -நன்றி.....      வாழ்க வளமுடன்

இப்படிக்கு 
உங்கள் ராபின் கார்த்திக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனது பதிவுகள் உங்களை புதிய ஒரு சிந்தனையை தந்ததா நண்பரே...
அப்படியானால் உங்களுடைய கருத்தை சொல்லிவிட்டுச் செல்லுங்கள்.அது இந்தியாவின் சரித்திரத்தில் நிச்சயம் இடம்பிடிக்கும்...
நன்றி..
இப்படிக்கு
உங்கள் BIGDREAMER கார்த்திக்