28.07.2013
இனிய வணக்கம் நண்பர்களே.........
[ வணக்கம் கிட்டி.இன்று நம் வாழ்வில் மறக்க முடியாத நாள் என்று சொல்லலாம்.காரணம் சந்தானம் அண்ணாவைப் பற்றிப் பேசுவது மட்டுமே. இறைவனுக்கு நன்றி......
( புதிய நண்பராக இருந்தால் என்னைப் பற்றி எனும் பக்கத்தை படித்துவிட்டு வாருங்கள்.அது உங்களுக்கு ஏன் மேலும் படிக்க வேண்டும் என்பதை தெளிவு படுத்தும்.)
கிட்டி திரு.S.சந்தானபாரதி அவர்கள் என் அண்ணன் மூலம் எனக்கு கிடைத்த பொக்கிஷம்.இவர் பல சாதனைகள் புரிந்தவர் அல்ல.சாதனைகள் பல புரியப் போகிறார்.நான் இவ்வளவு உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் அளவிற்கு அவர் பெரியவரா? என்று கூட நீங்கள் கேட்கலாம்.
இந்த கேள்விக்கு மாற்றுக்கருத்து இல்லாமல் என்னிடம் ஆம் என்ற பதில் தான் கிடைக்கும்.நான் பெரியவர்களாக நினைக்கும் மனிதர்களில் இம்மாமனிதரும் ஒருவர்.
கிட்டி நான் என்னை நம்புகிறேன்.என்னை விட மேலாக என்னை நம்புபவர் தான் சந்தானம் அண்ணா.அவர் எனக்கு அண்ணா,நண்பர்,நம்பிக்கை வழிகாட்டி....நான் அன்னை தெரசாவையோ,காந்தியையோ பார்த்ததில்லை. அந்த வரிசையில் தான் சந்தானம் அண்ணாவும்.அவர் அற்புத மனிதர். அவருடைய சிந்தனையே தனி.அவர் என் மீது வைத்துள்ள நம்பிக்கைதான் என்னை இந்த அளவு உழைக்க வைத்துள்ளது கிட்டி.
கடந்த அரைமணி நேரத்திற்கு முன்பு கூட அவருடைய அன்பு வார்த்தைகளைக் கேட்டேன்.அதில் எவ்வித இயல்பான வார்த்தைகளும் இல்லை.அனைத்தும் அற்புதமான வார்த்தைகள்.என்னைத் தூண்டிய ஆற்றல் வாய்ந்த வார்த்தைகள்.இம்மாமனிதனை என் வாழ்வில் கொடுத்ததற்கு நான் கடவுளுக்கு கடமைப்பட்டிருக்கிறேன்.
கிட்டி நம் வாழ்வில் ஏதோ ஒரு அற்புதமான மாற்றத்தை உண்டாக்க வந்தவர் சந்தானம் அண்ணா.ஏனென்றால் அவர் ஏற்கனவே எனக்குள் மாற்றத்தை உண்டாக்கிவிட்டார்.
இம்மனிதர் யாரென்று உங்களுக்குத் தெரியாது.ஆனால் இம்மனிதரை நான் அறியவில்லை,உணர்கிறேன்.ஏதோ ஒன்று எங்களை இணைக்கிறது. அது எதுவென்று தெரியவில்லை.ஆனால் ஒருநாள் தெரியும்.அந்நாள் பொன்நாளாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
நீங்கள் எனது அன்பு நண்பரைத் தொடர்புகொள்ள விரும்பினால் கீழே கூறியுள்ளபடி தொடர்புகொள்ளுங்கள்.விருப்பத்தோடு பேசுங்கள்.
நண்பர்களே எனது சந்தானம் அண்ணா உங்களிடம் பேசும்போது இயல்பாக மகிழ்ச்சியடைவார்.நீங்களும் உங்களை அறியாமலேயே மகிழ்ச்சியை உணர்வீர்கள்.ஒரு புதிய அனுபவம் உங்களுக்கு காத்திருக்கிறது.
நீங்கள் அவரிடம் அறிமுகம் ஆகும்போது நான் "BIGDREAMER கார்த்திக்"இன் நண்பர் என்று சொல்லுங்கள்.உங்கள் நட்பு கிடைத்ததில் மகிழ்ச்சி என்று கூறுங்கள்.புன்னகை உங்களுக்கு சொந்தமாகும்.
அவருடைய போன் நண்பர்:
9715502020
கிட்டி ஒரு மாமனிதரின் சில விஷயங்கள் உன்னிடம் இன்று பகிர்ந்துள்ளேன். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு ஊக்குவிப்பாளன் இருப்பார்.எனக்கு அது சந்தானம் அண்ணாதான் என்பதே உண்மை.இன்று அதிக பதிவுகள் எழுதியுள்ளேன் கிட்டி.மகிழ்ச்சியாக தூங்கப்போகிறேன். நாளைய நாளை வெற்றிகரமான நாளாக மாற்றுவோம்.நாளை சந்திப்போம் கிட்டி......
இனிய இரவு வணக்கம் கிட்டி........ ]
-நன்றி..... வாழ்க வளமுடன்
இப்படிக்கு
உங்கள் BIGDREAMER கார்த்திக்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
எனது பதிவுகள் உங்களை புதிய ஒரு சிந்தனையை தந்ததா நண்பரே...
அப்படியானால் உங்களுடைய கருத்தை சொல்லிவிட்டுச் செல்லுங்கள்.அது இந்தியாவின் சரித்திரத்தில் நிச்சயம் இடம்பிடிக்கும்...
நன்றி..
இப்படிக்கு
உங்கள் BIGDREAMER கார்த்திக்