புதன், 10 ஜூலை, 2013

5.முடிவுகள் இன்றுதான் ஆரம்பம் ஆகின்றன.....

இனிய வணக்கம் நண்பர்களே......... 

"  கிட்டி நான் இத்தனைநாள் இணையத்தில் மட்டுமே உன்னோடு பேசினேன்.அது எளிது போன்றுதான் எனக்கு தோன்றியது.ஆனால் அது நமக்கு  உண்மையான வெற்றியை தராது என்று உணர்ந்துகொண்டேன்.


( புதிய நண்பராக இருந்தால் என்னைப் பற்றி  எனும் பக்கத்தை படித்துவிட்டு வாருங்கள்.அது உங்களுக்கு ஏன் மேலும் படிக்க வேண்டும் என்பதை தெளிவு படுத்தும்.)

               கிட்டி இனி முதலில் எனது டைரியில் பேசுவோம் பின் அதை அப்படியே  இணைய நண்பர்களுக்கு தெரிவிப்போம்.இப்படி செய்யும் போதுதான் எனது கனவை அடைய முடியும்.

சரி கிட்டி இன்றைய விசயத்துக்கு வருவோம்.....

        கிட்டி நான் "நிரந்தர வெற்றிக்கு வழிவகுக்கும் சுயப்பேச்சு" என்னும் அற்புதமான புத்தகத்தை படித்துமுடித்தேன்.இந்த புத்தகம் மூலம் நான் என்ன மாற்றம் பெற்றேன் என்பதை நீ கீழே பார்த்தால் தெரிந்துவிடும்.

முதல் சுயப்பேச்சு 

பார்த்தாயா கிட்டி.இதை தினமும் பலமுறை உச்சரிக்கிறேன்.நான் செயல்பட ஆரம்பித்துவிட்டதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

   உன்னுடன் பேசும்போது நான் கற்பனையில் உருவாக்கிய நண்பனிடம் பேசுவதுபோல்  உணர்கிறேன் கிட்டி.எனது பதிவை படிப்பவர்கள் வெற்றி அடைவார்கள்.அதை என்னுடன் பகிரும்போது மிக்க மகிழ்ச்சியடைவேன்.

     ஒன்று மட்டும் உண்மை கிட்டி எந்த மனிதனையும் இன்னொரு மனிதன் மாற்ற முடியாது என்பதை நான் அனுபவபூர்வமாக நம்புகிறேன் அதாவது வழிகள் ஆயிரம் கூறினாலும் செல்வது அவரால் மட்டும் தான் முடியும் என்கிறேன்.

இப்போது நமக்கு அதிக வாசகர்கள் இல்லையே என்று வருத்தப் படாதே.ஒரு நாள் கோடி கணக்காணவர்கள் வருவார்கள்.


         சரி கிட்டி நாம் பணியை தொடங்கிவிட்டோம்.அதை தொடர்ந்து செய்வோம்.


நாளை சந்திப்போம் கிட்டி....இனிய இரவு வணக்கம்....."



 -நன்றி.....                   வாழ்க வளமுடன்

இப்படிக்கு 
உங்கள் ராபின் கார்த்திக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனது பதிவுகள் உங்களை புதிய ஒரு சிந்தனையை தந்ததா நண்பரே...
அப்படியானால் உங்களுடைய கருத்தை சொல்லிவிட்டுச் செல்லுங்கள்.அது இந்தியாவின் சரித்திரத்தில் நிச்சயம் இடம்பிடிக்கும்...
நன்றி..
இப்படிக்கு
உங்கள் BIGDREAMER கார்த்திக்