வெள்ளி, 5 ஜூலை, 2013

2.எனது முடிவு உங்களுக்காக ........

(05.07.2013)

இனிய வணக்கம் நண்பர்களே......... 

எனது கிட்டியிடம் பேசுவதற்கு முன் சில விசயங்களை சொல்ல விரும்புகிறேன்.இது நீங்கள் அறிய வேண்டிய விசயமும் கூட.

( புதிய நண்பராக இருந்தால் என்னைப் பற்றி  எனும் பக்கத்தை படித்துவிட்டு வாருங்கள்.அது உங்களுக்கு ஏன் மேலும் படிக்க வேண்டும் என்பதை தெளிவு படுத்தும்.)

இனியவர்களே என்னைப் பற்றி நீங்கள் அறிந்த பிறகு எனது வாழ்க்கையைப் பற்றி மேலும் அறிய விரும்புவீர்கள்.நான் யாறென்றால் "நான் யாறென்று அறிய உழைக்கும்  மனிதன்".என்னைப் போல் நீங்களும் நீங்கள் யாறென்று அறிய விரும்பினால் என் தொடர் உங்களுக்கு உதவும் என நான் உறுதியாக நம்புகிறேன்.அதனால் என்  இணைய டைரியை நான் சரியாக கையாள சில முடிவுகளை எடுத்துள்ளேன்.

முடிவுகளும்,காரணங்களும்:

1. அதிகபட்சம் வாரம் ஒரு முறை மட்டும் பதிவிடப்போகிறேன்.
தினமும் எனது வீட்டு டைரியில் எழுதிவிடுவேன்.ஆனால் தினமும் இணைய இணைப்பு இருக்குமா என்பது சந்தேகம்.இதுவும் நன்மையே.ஏனென்றால் எனது எண்ணங்களை இன்னும் தெளிவாக்க இந்த கால இடைவேளை உதவும் என நம்புகிறேன்.

2.நான் என்னை செதுக்க அதிக நேரம் எடுக்கப் போகிறேன்.நான் உங்களுக்கு கடமைப் பட்டிருக்கிறேன்.ஏனென்றால் சாதனை படைக்கும் ஆசையோடு நீங்கள் இங்கு வந்திருப்பீர்கள்.உங்கள் ஆசை நிறைவேற என்னை மாற்றுவதே  என் முதல் கடமையாக நினைக்கிறேன்.

சில முக்கியமானவை:

                இனி வரும் பதிவுகள் உங்களுக்கு ஒரு தனி மனிதனின் எண்ணங்களைப் படிப்பதாக இருக்கும்.ஆனால் அவைதான் உங்களுக்கு
தேவை.நான் என் டைரியான கிட்டியிடம் என்  மாற்றங்களையும்,
வெற்றிகளையும் குறிப்பிடுவேன்.பதிவின் நடுவே  நான் உங்களுக்கு ஏதாவது முக்கிய கருத்தையோ,என் அனுபவத்தையோ  குறிப்பிட்டிருப்பேன்.அது கண்டிப்பாக உங்களுக்குப் பயன்படும்.

         நான் உங்களிடம் உண்மையாக இருக்கிறேன்.அதேபோல் எனது டைரியிடமும் உண்மையாக இருக்கிறேன்.நான் வெற்றியின் பாதையை கண்டுபிடித்துவிட்டேன்.உங்களையும் அழைக்கிறேன் அவ்வளவுதான்......


உங்கள் மனதை கேளுங்கள் நான் உங்களுக்கு உதவுவேனா?என்று. உங்கள் மனம் உதவும் என்றால் என்னுடன் சேருங்கள்.நம்பிக்கைதான் வாழ்க்கை.


ஒன்று மட்டும் நியாபகம் வைத்துக்கொள்ளுங்கள்

"நீங்கள் யாராக மாற விரும்புகிறீர்களோ அவராக மாறுவதற்கு இன்னும் காலம் முடிந்துவிடவில்லை"


மீண்டும் சந்திப்போம்.......

 -நன்றி                       வாழ்க வளமுடன்

இப்படிக்கு 
உங்கள் ராபின் கார்த்திக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனது பதிவுகள் உங்களை புதிய ஒரு சிந்தனையை தந்ததா நண்பரே...
அப்படியானால் உங்களுடைய கருத்தை சொல்லிவிட்டுச் செல்லுங்கள்.அது இந்தியாவின் சரித்திரத்தில் நிச்சயம் இடம்பிடிக்கும்...
நன்றி..
இப்படிக்கு
உங்கள் BIGDREAMER கார்த்திக்